×

ரீரிலீசாகும் காதலுக்கு மரியாதை, வாலி

 

சென்னை: 1997ம் ஆண்டு பாஸிலின் இயக்கத்தில் வெளியான படம் காதலுக்கு மரியாதை. விஜய், ஷாலினி ஜோடி. இளையராஜா இசையமைத்திருந்தார். சிவகுமார், ராதாரவி, தலைவாசல் விஜய், தாமு, சார்லி, மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். காதலர்களுக்கு மத்தியில் மிகப் பிரபலமான படம் இன்னும் எத்தனையோ படங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது. இப்படியான நிலையில் காதலர் தினத்தன்று இப்படம் வெளியாகாததில் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

இதனை ஈடுகட்டும் வகையில் வரும் பிப்ரவரி 23ம் தேதி சென்னை கமலா திரையரங்கத்தில் இப்படம் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக அறிமுகமான அஜித், சிம்ரன் நடித்த ‘வாலி’ படமும் அதே நாளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. டிக்கெட் விலை ரூ.69தான் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ரீரிலீசாகும் காதலுக்கு மரியாதை, வாலி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Basil ,Vijay ,Shalini ,Ilayaraja ,Sivakumar ,Radharavi ,Thalivasal Vijay ,Thamu ,Charlie ,Manivannan ,Wally ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண,...