×

உடல்நலம் குறித்த டிப்ஸ் வழங்க யூடியூப் சேனல் தொடங்கினார் சமந்தா

ஐதராபாத்: மயோசிடிஸ் என்ற தசை அழற்றி நோய் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா, அதிநவீன சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார். தற்போது ஓரளவு உடல்நிலை தேறியுள்ள அவர், மீண்டும் சினிமாவில் தீவிரமாக செயல்பட இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த அவர், விரைவில் உடல்நலம் குறித்த டிப்ஸ் வழங்க சேனல் தொடங்குவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று அவர் வெளியிட்ட அறிமுக வீடியோவில், ‘டேக் 20’ என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். தன்னுடன் அல்கேஷ் என்பவர் பேசுவார் என்று கூறியுள்ளார். உடல்நலம் குறித்த டிப்ஸ்களை வழங்கும் இந்த சேனலின் முதல் வீடியோ, வரும் 19ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே பிரதியுஷா என்ற அமைப்பின் மூலம் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவி செய்து வரும் சமந்தா, சகி என்ற புடவை பிராண்ட் மூலம் நெசவாளர்களுக்கும், ட்ராலாலா என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சின்ன கலைஞர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவும் வழி செய்துள்ளார்.

The post உடல்நலம் குறித்த டிப்ஸ் வழங்க யூடியூப் சேனல் தொடங்கினார் சமந்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samantha ,YouTube ,Hyderabad ,America ,South Korea ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி