×

அபுதாபியில் திரைப்பட விழா; தமிழ் திரைப்பட கலைஞர்கள் பங்கேற்பு

IFA (Innovative Film Academy – India & Abu Dhabi) அதன் நிறுவனர் திரு சரவண பிரசாத், Abu Dhabi Film Commission, Department of Culture & Tourism இணைந்து Tamil, Telugu, Malayalam, Kannada சினிமா தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் (Producer, Director, Distributor) அவர்களுக்காக ஒரு மெகா திரைப்பட விழா, கடந்த 9, 10 மற்றும் 11 Februaryல் அபுதாபியில் , TWOFOUR 54, YAS Creative Hub, Yas Island என்ற இடத்தில மிக பிரமாண்டமாக நடை பெற்றது. இவ்விழாவில் திரைப்பட திரையிடல், முதன்மை வகுப்புகள், சினிமா வணிக மாநாடு, Workshop நடைபெற்றது .ஒளிப்பதிவு குறிப்புகளை ஒளிப்பதிவாளர் திரு ரத்தினவேலு, திரு மனோஜ் பரமஹம்சா அருமையாக விளக்கினார்கள். Oscar Winner Mr Resul Pookutty, Sound Engineering & Mixing குறிப்புகளை 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு விளக்கினார்கள்.

இவ்விழாவில் கெளரவ விருந்தினர் நடிகை குஷ்பு, குட்டி பத்மினி, Dr Ishari Ganesh, இயக்குனர் பேரரசு, R V உதயகுமார், தயாரிப்பாளர் தமிழ் குமரன், அந்தோணி, ஞானவேல் ராஜா, கார்த்திகேயன் சந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். Dr சிவராஜ்குமார், திருபிரபுதேவா, திருவெங்கடேஷ் குழுவினர் அவர்களின் புதிய கன்னட படம் Karataka Damanaka பாடலை வெளியிட்டு, Dr சிவராஜ்குமார், திருபிரபுதேவா அந்த பாடலுக்கு நடனமும் ஆடினார்கள். முக்கியமாக இந்த விழாவில் The Abu Dhabi Film Commission இந்திய படங்கள் திரைப்பட படப்பிடிப்பிற்காக Abu Dhabi வந்தால், என்ன என்ன வசதிகள், ஆதரவு மற்றும் எல்லா உதவிகளையும் Abu Dhabi Government முழு ஆதரவு, ஒத்துழைப்பு தருவதாக சொல்லி உள்ளார்.

The post அபுதாபியில் திரைப்பட விழா; தமிழ் திரைப்பட கலைஞர்கள் பங்கேற்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Film Festival ,Abu Dhabi ,IFA ,Innovative Film Academy ,India ,Abu ,Dhabi ,Saravana Prasad ,Abu Dhabi Film Commission ,Department of Culture & Tourism ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!