×

“ஒரு காலை இழந்தாலும் குறையாத நம்பிக்கை” – 1 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு காலால் குதித்து குதித்து செல்லும் சிறுமி..!

பாட்னா: சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு காலால் குதித்து செல்லும் பீகாரின் ஜமுய் பகுதியை சேர்ந்த சிறுமி சீமா. 10 வயதான இந்த சிறுமி 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் தனது ஒரு காலை இழந்துள்ளார். ஒரு காலை இழந்தாலும் குறையாத நம்பிக்கை கல்வி மீது கொண்ட ஆர்வத்தாலும், தன்நம்பிக்கையாலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ஒரு காலில் குதித்துக் குதித்து தினமும் சென்று வருகிறார். இவரின் இந்த கல்வி ஆர்வத்தைப் பார்த்து ஆசிரியர்கள் மாணவி சீமாவிற்கு உதவியாக இருந்து வருகின்றனர். இதையடுத்து மாணவி சீமாவிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதற்கொண்டு நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். மேலும் மாணவிக்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வீடியோ வைரலானதை அடுத்து, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக சோனு சூட் உறுதி அளித்துள்ளார். …

The post “ஒரு காலை இழந்தாலும் குறையாத நம்பிக்கை” – 1 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு காலால் குதித்து குதித்து செல்லும் சிறுமி..! appeared first on Dinakaran.

Tags : Patna ,Bihar ,Jamui ,
× RELATED பீகார் மாநிலம் பாட்னாவில் காணாமல் போன...