×

திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவேன்: ஜி.வி.பிரகாஷ் குமார்

சென்னை: திறமைசாலிகளை திரைப் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்வதற்காக, ‘ஸ்டார்டா’ என்ற பிளாட்பார்ம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் பிராண்ட் அம்பாசிடராக ஜி.வி.பிரகாஷ் குமார் பொறுப்பு ஏற்றுள்ளார். இதன் அறிமுக விழாவில் அருண்ராஜா காமராஜ், ரமேஷ் திலக், நிவேதிதா சதீஷ், அபிஷேக் ராஜா, ஷ்யாம் குமார், சி.வி.குமார், தனஞ்செயன், சக்திவேலன், ‘ஸ்டார்டா’ தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரகுமார் கலந்துகொண்டனர். அப்போது ஜி.வி.பிரகாஷ் குமார் பேசியதாவது: திரைத்துறையில் தொடர்ந்து புதிய திறமைசாலிகளுடன் பணியாற்றி வருகிறேன். இதுவரை 23 படங்களில் நடித்துள்ளேன். இதில் 17 படங்களை புதியவர்கள் இயக்கியுள்ளனர்.

நிறைய புதிய நடிகர், நடிகைகள், பாடகர்கள், பாடகிகளுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்களில் கோடி கோடியாக பணம் கொடுத்தாலும் நடிப்பது இல்லை. சில விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராகப் பணியாற்றியுள்ளேன். தற்போது ‘ஸ்டார்டா’ பிளாட்பார்மின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். இதில் புதிய திறமைசாலிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் வீடியோ இடம்பெற்றுள்ளது. இது திரைப்பட நிறுவனங்கள், இயக்குனர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் போன்றோருக்கு தங்களுக்கு தேவையான திறமைசாலிகளை தேர்வு செய்ய வசதியாக இருக்கும். நானும் எனது படங்களில், ‘ஸ்டார்டா’ பிளாட்பார்மில் இடம்பெற்றுள்ள திறமைசாலிகளை தேர்வு செய்து வாய்ப்பு வழங்குவேன்.

The post திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவேன்: ஜி.வி.பிரகாஷ் குமார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : GV Prakash ,Kumar ,CHENNAI ,GV ,Prakash Kumar ,Arunraja Kamaraj ,Ramesh Tilak ,Nivedita Satish ,Abhishek Raja ,Shyam Kumar ,GV Prakash Kumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐஸ்வர்யா சிபாரிசு செய்ததால் நடிக்க பயந்தேன்: ஜி.வி.பிரகாஷ்