×

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ரசிகர்கள் காயம்: பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி

கொழும்பு: பிரமாண்டமான முறையில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று நடைபெற்றது. ரம்பா, தமன்னா, சிவா, யோகி பாபு உள்ளிட்ட சில பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியைக் காண 25,000 ரூபாய் செலுத்தியவர்களுக்கு முன்பகுதியும், 7,000 ரூபாய் செலுத்தியவர்களுக்கு நடுப்பகுதியும், 3,000 ரூபாய் செலுத்தியவர்களுக்குப் பின்பகுதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு பெரும்பாலானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே இலவச பார்வையாளர்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பைக் கடந்து இளைஞர்கள் பலரும் கூச்சலிட்டுக்கொண்டு கட்டணம் செலுத்தியவர்கள் பகுதிக்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. தள்ளுமுள்ளு காரணமாக பலர் காயமடைந்தனர். அங்கிருந்த சுவர்கள், மரங்கள் போன்றவற்றில் ஏறினர். இதனால் இசை நிகழ்ச்சி இடையில் சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டது. இருந்தும் கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தி பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின் பாதியிலேயே அவசர அவசரமாக இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது போன்ற குழப்பங்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உள்ள கவனக்குறைபாடுகளே காரணம் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட சிலர் கூறும்போது, ‘35 ஆயிரம் பார்வையாளர்கள்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கிட்டத்தட்ட 1.10 லட்சம் பேர் வந்திருக்கிறார்கள். எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யவில்லை. தள்ளுமுள்ளுவில் சிக்கி பலர் காயமடைந்தனர், போலீஸ் தடியடியாலும் பலர் காயம் அடைந்தனர்’ என்றனர்.

The post ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ரசிகர்கள் காயம்: பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hariharan ,Colombo ,Jaffna courtyard ,Rambha ,Tamannaah ,Siva ,Yogi Babu ,Kollywood Images ,
× RELATED அறந்தாங்கியில் பைக்குகள் மோதிய விபத்தில் சவுண்ட்சர்வீஸ் தொழிலாளி பலி