×

நடிகர் ஆனார் லோகேஷ் கனகராஜ்

சென்னை: கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் உருவாகும் இசை ஆல்பத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ‘ரஜினி 171’ படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் அண்மையில் ‘சலார்’ படம் வெளியானது. இந்நிலையில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டது. இதற்கான கேப்ஷனில், ‘இனிமேல் டெலுலு என்பது புதிய சொல்லு’ என பதிவிடப்பட்டிருந்தது.

இது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜும் ஆல்பம் பாடல் ஒன்றுக்காக கைகோர்த்துள்ளனர். அதற்கான அறிவிப்புதான் இந்த போஸ்டர். மேலும், இந்தப் பாடலானது வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. பாடலை பாடி இசையமைத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்தப் பாடலை கேட்டபின்பு லோகேஷ் கனகராஜ் ஆல்பத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post நடிகர் ஆனார் லோகேஷ் கனகராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lokesh Kanagaraj ,Chennai ,Kamal Haasan ,Rajkamal Films International ,Shruti Haasan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...