×

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த சிரஞ்சீவி, திரிஷா

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி ஹீரோ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ என்ற பன்மொழி படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்கில் தொடங்கியது. இப்படத்துக்காக 13 பிரமாண்ட அரங்குகளை படக்குழுவினர் அமைத்துள்ளனர். இந்நிலையில், சிரஞ்சீவி ஜோடியாக திரிஷா நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

முதல் நாள் நடந்த படப்பிடிப்பில் திரிஷா பங்கேற்றார். அவருக்கு சிரஞ்சீவி, இயக்குனர் வசிஷ்டா மற்றும் தயாரிப்பாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதற்கு முன்பு சிரஞ்சீவியுடன் ‘ஸ்டாலின்’ என்ற படத்தில் திரிஷா நடித்துள்ளார். இப்படம் கடந்த 2006 செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார்.

தற்போது ‘விஸ்வம்பரா’ படத்தில் மெகா மாஸ் பேண்டஸி உலகத்தை வெளிப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை யு.வி கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி, பிரமோத் தயாரிக்கின்றனர். சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்ய, எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த், மயூக் ஆதித்யா ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகப் பணியாற்றுகின்றனர்.

ஸ்ரீசிவசக்தி தத்தா, சந்திரபோஸ் பாடல்கள் எழுதுகின்றனர். அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ம் தேதி படம் திரைக்கு வருகிறது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிரஞ்சீவி, திரிஷா இணைந்துள்ள தகவல் அறிந்த இருதரப்பு ரசிகர்களும் தங்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த சிரஞ்சீவி, திரிஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chiranjeevi ,Trisha ,HYDERABAD ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்