×

அரசியல் கட்சி தொடங்கவில்லை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

சென்னை: நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை நேற்று காலை அறிவிப்பார் என சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது. 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அறிக்கை ஒன்றை விஷால் வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் ‘தேவி அறக்கட்டளை’ மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம்.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை. தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களில் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன். இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

The post அரசியல் கட்சி தொடங்கவில்லை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vishal ,CHENNAI ,Tamil Nadu assembly elections ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரத்னம் பட நிலுவைத்தொகை விவகாரம்; தனி...