×

ஒளிப்பதிவாளரை மணக்கிறார் ரஜிஷா விஜயன்

சென்னை: மலையாள ஒளிப்பதிவாளர் டோபின் தாமஸை நடிகை ரஜிஷா விஜயன் காதலிப்பது உறுதியாகியுள்ளது. மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் ரஜிஷா விஜயன். தமிழில் தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து, சூர்யா நடித்த ஜெய் பீம், கார்த்தி நடித்த சர்தார் படங்களில் நடித்தார். இவரும் ஒளிப்பதிவாளர் டோபின் தாமசும் காதலிப்பதாக கிசு கிசு பரவியது. அதைப் பற்றி இருவரும் பேசாமல் இருந்தனர்.

இந்நிலையில் ரஜிஷாவுடன் இருக்கும் புகைப்படங்களை டோபின் தாமஸ், தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில் ‘1461 நாட்கள். மற்றுமொரு பயணம். செல்லக் காத்துக்கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். இதையடுத்து இருவரின் நண்பர்கள், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த ஆண்டே ரஜிஷாவுக்கும் டோபின் தாமசுக்கும் திருமணம் நடக்கும் என அவருக்கு நெருங்கிய ஒருவர் கூறினார்.

The post ஒளிப்பதிவாளரை மணக்கிறார் ரஜிஷா விஜயன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajisha Vijayan ,Chennai ,Tobin Thomas ,Dhanush ,Suriya ,Jai Bheem ,Karthi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...