×

லால் சலாம் படத்தில் அப்பா ரஜினி நடித்தது ஏன்? ஐஸ்வர்யா விளக்கம்

சென்னை: லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள படம் லால் சலாம். இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிருபர்களிடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியது: இந்த படத்தில் அப்பா ரஜினி நடித்ததற்கு நான் இயக்குனராக இருப்பதுதான் காரணமா எனக் கேட்கிறீர்கள். நிச்சயமாக இல்லை. இதில் அவர் நடிக்க, கதைதான் காரணம்.

இந்த படம் சொல்லும் மெசேஜ்தான் காரணம். இதற்கு முன் பொழுதுபோக்கு படங்களை இயக்கிவிட்டு, இப்போது விளையாட்டு துறையை ஆட்டிப் படைக்கும் அரசியல் பற்றி பேசியதற்கு காரணம் இருக்கிறது. காரணம், ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்குமே அரசியல் பற்றி பேசவும் தெரியவும் விமர்சிக்கவும் அதிகாரம் உள்ளது. அந்த பொறுப்புணர்ச்சியால்தான் இந்த கதையை தேர்வு செய்தேன். இந்திய சினிமாவில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்து பல படங்கள் வந்துள்ளன. ஆனால், தனது வாழ்நாளில் அதுபோல் ஒரு படத்தில் அப்பா ரஜினி நடிக்கவில்லை என நீங்கள் (நிருபர்கள்) சொல்வது உண்மைதான்.

காரணம், எந்த மதமும் வெறுப்பையும் குற்றங்களையும் ஆதரிக்கவில்லை. அதனால் முஸ்லிம்களை பற்றி கட்டமைக்கப்படும் பிம்பம் தவறானது. அதனால்தான் இந்த படத்தில் அப்பா இஸ்லாமியராக நடித்திருக்கிறார். ஆனால், இந்த படத்தை சில வளைகுடா நாடுகள் எதற்காக தடை செய்திருக்கிறது என்பதுதான் புரியவில்லை. விஷ்ணு விஷாலும் விக்ராந்தும் நிஜ கிரிக்கெட்டர்கள் என்பதால் கிரிக்கெட் வீரர்களாக இன்னும் இந்த கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறினார். விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, மூணார் ரமேஷ், தங்கதுரை, சத்யா என்ஜே, திவாகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post லால் சலாம் படத்தில் அப்பா ரஜினி நடித்தது ஏன்? ஐஸ்வர்யா விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajini ,Lal ,Aishwarya ,Chennai ,Lyca Productions ,Rajinikanth ,Vishnu Vishal ,Vikrant ,Aishwarya Rajinikanth ,AR Rahman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை,...