×

தன்னார்வலர்களுக்கு கார்த்தி பாராட்டு

சென்னை: கடந்த 2023 அக்டோபரில் சென்னையில் நடந்த ‘கார்த்தி 25’ விழாவில், இந்த சமூகத்துக்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் கார்த்தி ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை அறிவித்தார். அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயலைப் பாராட்டும் வகையில், தலா 1 லட்ச ரூபாய் வீதம் 25 லட்ச ரூபாய் வழங்கிய பிறகு அவர் பேசியதாவது: 25 படங்களில் நடித்துவிட்டேன். அதற்காக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஒரு கோடி ரூபாய் அளவில் அன்னதானம் வழங்கினோம். தொடர்ந்து 25 பள்ளிகள், ஆதரவற்ற 25 முதியோர் இல்லங்களுக்கு உதவிகள் செய்தேன். தற்போது 25 தன்னார்வலர்களுக்கு உதவி செய்துள்ளேன்.

சிறுவர், சிறுமியருக்கு என்ன படிக்கலாம், எப்படி சம்பாதிக்கலாம் என்பதை தாண்டி, அன்பாக இருங்கள் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். உதவும் எண்ணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், யார் மூலம் உதவுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. பலரிடம் பணம் இருக்கிறது, நேரம் இல்லை. அப்படி தங்களது பொன்னான நேரத்தைச் செலவழித்து, உதவி தேவைப்படுபவர்களை தேடிச்சென்று உதவும் தன்னார்வலர்களை
வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சியை நான் ஏற்பாடு செய்தேன்.

 

The post தன்னார்வலர்களுக்கு கார்த்தி பாராட்டு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Karti ,Chennai ,Karthi 25 ,Karthi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பையா ரீ-ரிலீஸ் மகிழ்ச்சி அளித்திருக்கிறது: கூறுகின்றனர் கார்த்தி, தமன்னா