×

மீண்டும் தமிழுக்கு வந்தார் நிஹாரிகா

சென்னை: எஸ்ஆர் புரொடக்‌ஷன்ஸ் பி.ஜெகதீஷ் தயாரிக்கும் படம், ‘மெட்ராஸ்காரன்’. இதை ‘ரங்கோலி’ வாலி மோகன்தாஸ் இயக்குகிறார். திரில்லர் கதை கொண்ட இதில் மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் நடிக்கின்றனர். ஷேன் நிகாம் ஜோடியாக தெலுங்கு நடிகை நிஹாரிகா நடிக்கிறார். சிரஞ்சீவியின் உறவினரான அவர், தெலுங்கில் வெப்தொடர்கள் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே அவர், தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.சின்னதாக ஏற்படும் ஈகோ, ஒருவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது கதை. ஒரு சின்ன சம்பவம் பெரிய பிரச்னையாக மாறி, இருவரது வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதைப் பற்றி சொல்லும் ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் ஷூட்டிங் சென்னை, மதுரை, கொச்சி ஆகிய பகுதிகளில்
ஒரேகட்டமாக நடந்து முடிகிறது.

 

The post மீண்டும் தமிழுக்கு வந்தார் நிஹாரிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Niharika ,CHENNAI ,SR Productions ,B. Jagadish ,Rangoli' Wali Mohandas ,Shane Nigam ,Kalaiyarasan ,Chiranjeevi's… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...