×

மங்களூரு செட்டில் உருவாகிறது ‘காந்தாரா – எ லெஜண்ட் பாகம் 1’

பெங்களூரு: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ’காந்தாரா’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கன்னடத்தில் சிறுபட்ஜெட்டில் உருவாகி அதிக வசூல் செய்த பான் இந்தியா படமான இதன் 2ம் பாகம் சீக்வலாக இல்லாமல், ஃப்ரீக்வலாக உருவாகிறது. இப்படத்துக்கு ‘காந்தாரா – எ லெஜண்ட் பாகம் 1’ என்று பெயரிட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இப்படத்தின் கதை கடந்த 1970 முதல் 1980 வரையிலான காலக்கட்டத்தில் நடப்பது போல் அமைந்திருப்பதால், படப்பிடிப்பு நடத்துவதற்கான மிகப் பிரமாண்டமான செட்டுகள் அமைக்கும் பணி மங்களூருவில் தொடங்கியுள்ளது. வரும் மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஹீரோயினாக சப்தமி கவுடா நடிக்கிறாரா என்பது பற்றி தெரிவிக்கவில்லை.

 

The post மங்களூரு செட்டில் உருவாகிறது ‘காந்தாரா – எ லெஜண்ட் பாகம் 1’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mangalore ,Bengaluru ,Rishabh Shetty ,India ,Kannada ,Kollywood Images ,
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...