×

கிஸ் சீனுக்கு நோ…: மீனாட்சி சவுத்ரி

ஐதராபாத்: மீனாட்சி சவுத்ரி, விஜய் ஜோடியாக நடித்து வரும் அவர் அளித்த பேட்டியில், ‘புதுப்படங்களில் நடிக்க நான் நிறைய கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறேன். கதையும், என் கேரக்டரும் பிடிக்கவில்லை என்றால், கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் அப்படத்தில் நடிக்க மாட்டேன். இதனால், நிறைய முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்துள்ளேன். அதற்காக எப்போதுமே வருத்தப்பட்டது இல்லை. கதைக்கும், காட்சிக்கும் முக்கியம் என்றால் மட்டுமே கவர்ச்சியாகவும், முத்தக்காட்சியிலும் நடிப்பேன்.

வலுக்கட்டாயமாக திணித்தால் நடிக்க மாட்டேன். எனக்கு பணம் இரண்டாம் பட்சம்தான். நான் ஏற்று நடிக்கும் மாறுபட்ட கேரக்டரை ரசிகர்கள் வெளிப்படையாக பாராட்ட வேண்டும் என்பதே முக்கியம். நல்ல கதைகளில் நடித்தால்தான் காலம் கடந்தும் நிலைக்க முடியும்’ என்று கூறியுள்ளார்.

 

The post கிஸ் சீனுக்கு நோ…: மீனாட்சி சவுத்ரி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Meenakshi Chaudhary ,Hyderabad ,Meenakshi Chowdhury ,Vijay ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பர்தா அணிந்தபடி நகை கடைக்குள்...