×

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்: அமைச்சர், எம்பி பங்கேற்பு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி மாங்காடு நகர திமுக சார்பில்,  தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாங்காடு பகுதியில் நடந்தது. நகர  செயலாளர் பட்டூர் எஸ்.ஜபருல்லா தலைமை வகித்தார்.  கூட்டத்தில், திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி பேசினர். இதில், மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட தலைவர் த.துரைசாமி, குன்றத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன், மாநில ததொநுபிது செயலாளர் அ.தமிழ்மாறன்,  ஒன்றிய செயலாளர்கள் ந.கோபால்,  எஸ்.டி.கருணாநிதி,  ஏ.வந்தேமாதரம், குன்றத்தூர் நகர மன்ற தலைவர் கோ.சத்தியமூர்த்தி,  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் டி.சதீஷ்குமார், மாங்காடு  முன்னாள் சிறப்பு நிலை  பேரூராட்சி தலைவர் எம்.ஆர்.சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி ஜி.ராமு, நகர இளைஞரணி  அமைப்பாளர் சாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்….

The post தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்: அமைச்சர், எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Sriperuthur Assembly Constituency Mangadu City Dizhagam ,Government of Tamil Nadu ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...