×

வித்தைக்காரன் படத்துக்காக: மேஜிஷியன் ஆனார் சதீஷ்

 

சென்னை: லோகேஷ் கனகராஜிடம் பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வித்தைக்காரன்’ படத்தில், சதீஷ் மேஜிஷியனாக நடித்துள்ளார். முதல் முறையாக சீரியஸ் கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார்.  இதில் சிம்ரன் குப்தா, ஆனந்த் ராஜ், ரமேஷ் திலக், ஜான் விஜய், தங்கதுரை மற்றும் இயக்குனர் வெங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வி.பி.ஆர் இசையமைத்திருக்கிறார். மாயாஜால மந்திர வித்தை செய்யும் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் வெங்கி கூறியது: சதீஷ் சகோதரர்களாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் ஒருவர் மேஜிக் நிபுணர். விமான நிலையத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான வைரம் பறிமுதல் செய்யப்படுகிறது. அதிகாரிகளிடம் இருக்கும் வைரத்தை ஒரு கும்பல் திருட முயல்கிறது. அந்த கும்பலிடம் சதீஷ் சிக்கும்போது என்ன நடக்கிறது என்பதே கதை. படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக காட்சிகள் நகரும். இதில் சதீஷ் காமெடி செய்ய மாட்டார்.
ஆனால், அவரை சுற்றியுள்ள மற்ற அனைவருமே காமெடி செய்வார்கள். ஒரு தலை காதலால் பாதிக்கப்பட்டால், அதற்காக அந்த பெண்ணை பழிவாங்கக் கூடாது என்ற கருத்தும் படத்தில் இருக்கிறது. டார்க் காமெடி திரில்லராக இது உருவாகியுள்ளது. கொள்ளை தொடர்பான படங்கள் நிறைய வந்துள்ளது. இந்திய படங்களில் விமான நிலையத்தில் கொள்ளையடிப்பது போல் இதுவரை கதை வந்ததில்லை. அந்த விதத்தில் இது புதுமையாக இருக்கும். இதற்காக கோவை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தினோம்.

The post வித்தைக்காரன் படத்துக்காக: மேஜிஷியன் ஆனார் சதீஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sathish ,Chennai ,Satish ,Venky ,Lokesh Kanagaraj ,Simran Gupta ,Anand Raj ,Ramesh Tilak ,John Vijay ,Thangadurai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED புழல் சிறையில் கைதிகளை சந்திக்க...