×

எமி ஜாக்சனை கரம் பிடிக்கும் ஹாலிவுட் நடிகர்

லண்டன்: நடிகை எமி ஜாக்சனுக்கு கடந்த 2019ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர், ஆண்ட்ரேஸ். தனது முன்னாள் காதலரான ஜார்ஜுடன் இவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், இவர்களின் காதல் முறிவில் முடிந்தது. இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன் பிரபல ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை இவர், டேட்டிங் செய்து வந்தார். இவர்களின் காதலை இவர்கள் சமூக வலைதளங்களின் மூலம் அறிவித்தனர்.  எமி ஜாக்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பனி சூழ்ந்த இடத்தில், தொங்கும் பாலத்தில் தனது காதலர் தனக்கு ப்ரப்போஸ் செய்ய, அதற்கு ஆச்சரியப்பட்டு தலை யசைத்திருக்கிறார் எமி. இந்த புகை ப்படங்கள் வைரலாகியுள்ளது. எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்ள இருக்கும் எட் வெஸ்ட்விக், உலகம் முழுவதும் பிரபலமான காசிப் கேர்ள் என்ற தொடரில் சக் பேஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டுமன்றி, ரோமியோ ஜூலியட், பின்னியனர் ரான்ஸம் உள்ளிட்ட பல ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

The post எமி ஜாக்சனை கரம் பிடிக்கும் ஹாலிவுட் நடிகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hollywood ,Amy Jackson ,London ,Andres ,George ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்