×

வரலட்சுமியுடன் திருமணமா? சிம்பு என்ன சொல்கிறார்?

சென்னை: சிம்புவும் வரலட்சுமியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்யப்போவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ம் தேதி திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியானது. ஒரு வழியாக சிம்புவுக்கு திருமணமாகப் போகிறது என ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். சிம்பு, வரலட்சுமி இருவருமே கலைக்குடும்ப வாரிசுகள். இந்த ஜோடி சிறப்பான ஜோடி என ரசிகர்களும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், ‘நானும் வரலட்சுமியும் நல்ல நண்பர்கள் மட்டுமே. நான் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை’ என சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘சிம்புவுக்கும், எனக்கும் திருமணம் கிடையாது. அவர் என் நண்பர்’ என வரலட்சுமி தரப்பிலும் கூறியுள்ளனர். இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் பரவி வந்த வதந்திக்கு இரு நட்சத்திரங்களின் தரப்பிலிருந்தும் விளக்கம் கிடைத்துள்ளது. இதனால் திருமண செய்தியால் சந்தோஷத்தில் இருந்த ரசிகர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்.

The post வரலட்சுமியுடன் திருமணமா? சிம்பு என்ன சொல்கிறார்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Varalakshmi ,Simbu ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பொதுமக்களுடைய நீண்டநாள் கோரிக்கையை...