×

அஜித்துக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி?

 

சென்னை: அஜித்துக்கு வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’, சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, பிரபுதேவா நடித்த ‘பகீரா’, விஷால் நடித்த ‘மார்க் ஆண்டனி’ படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை விரைவில் அஜித் முடிக்க உள்ளார். இதையடுத்து மே மாதத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்க இருக்கிறார். வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமி, தற்போது பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளார். இந்நிலையில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க அரவிந்த் சாமி சம்மதிப்பாரா என்பது இன்னும் ெதரியவில்லை என படக்குழு சொல்கிறது. இதில் மற்றொரு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளாராம். விஜய்யுடன் ‘மெர்சல்’, ‘வாரிசு’ படங்களில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, அஜித் படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் படமான ‘வாலி’யில் அஜித் ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

The post அஜித்துக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arvind Sami ,Ajith ,Chennai ,Arvind Samy ,Adhik Ravichandran ,GV Prakash ,Simbu ,Prabhu Deva ,Vishal ,Antony ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!