×

கவுண்டமணி, யோகி பாபு இணைந்த ஒத்த ஓட்டு முத்தையா

 

சென்னை: தற்கால அரசியலை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடித்துள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா. கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருப்பதாகவும் அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும் என்றும் இயக்குநர் சாய் ராஜகோபால் தெரிவித்தார். இவரும் இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஓஏகே. சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா , டி கே நிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சசி பிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் படம் உருவாகியுள்ளது.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், ‘சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி.பி. கஜேந்திரன் உள்ளிட்டோருடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்’ என்றார்.

The post கவுண்டமணி, யோகி பாபு இணைந்த ஒத்த ஓட்டு முத்தையா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Goundamani ,Yogi Babu ,Muttiah ,CHENNAI ,Kaundamani ,Otu Muthiya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி