×

இன்று உலக தேனீக்கள் தினம் உடலில் தேனீக்களை படர விட்டு சிறுவன் விழிப்புணர்வு

பழநி: இன்று உலக தேனீக்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மரம் மற்றும் செடிகள் தங்களது அடுத்த சந்ததிகளை உருவாக்க தேனீக்கள் முக்கிய காரணியாக விளங்குகின்றன. தேனீக்கள் தேன் எடுப்பதற்காக பூக்களில் அமரும்போது, அயன் மகரந்த சேர்க்கை நடைபெற்று பூக்கள், காய்களாக மாறுகின்றன. பூக்களில் மகரந்த சேர்க்கை நடப்பதற்கு தேனீக்களின் பணி அவசியமாகும். தேனீக்கள் அழிந்தால் பூக்களில் மகரந்த சேர்க்கை தடைபடும். இதனால் பூக்கள் காய்களாக மாற முடியாமல், விதைகள் உருவாகாமல் செடிகள் மலட்டுத்தன்மை அடைந்து விடும். போதிய விழிப்புணர்வு இல்லாததால், விவசாயிகள் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி தேனீக்களை அழித்து வருகின்றனர். இந்நிலை நீடித்தால் தேனீக்கள் இனம் அழிக்கப்பட்டு, பூக்கள் காய்க்க முடியாமலும், தனது சந்ததிகளை மீண்டும் உருவாக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்நிலையில் தேனீகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கொடைக்கானல் சாலையில் தேன் விற்பனை நிலையம் நடத்தி வரும் விசாக் என்பவரது மகன் முகமது தில்ஷான்(8), தனது உடலில் தேனீக்களை பரவ விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்….

The post இன்று உலக தேனீக்கள் தினம் உடலில் தேனீக்களை படர விட்டு சிறுவன் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : World Bees Day ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்