×

ஹாலிவுட் இயக்குனரின் படத்தில் சமந்தா அவுட் ஸ்ருதி இன்

 

சென்னை: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தசை அழற்சி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், நடிப்புக்கு சிறிது காலம் விடுமுறை கொடுத்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார். இதற்கிடையே அவர் கடந்த 2021-ல் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதை அவரும் அறிவித்திருந்தார். டிமேரி என் முராரியின் ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குவதாகவும் இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து சமந்தா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அந்த வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். அவருடன் விவேக் கல்ராவும் நடிக்கிறார். ஆங்கிலத்தில் உருவாகும் இந்தப் படத்தில் தமிழ் வசனங்களும் இடம் பெற இருக்கின்றன. ஸ்ருதிஹாசன், அனு என்ற தனியார் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார்.

The post ஹாலிவுட் இயக்குனரின் படத்தில் சமந்தா அவுட் ஸ்ருதி இன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samantha ,Shruti ,Hollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாலிவுட் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் திடீர் விலகல்