×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 16 மாவட்டங்களில் கனமழை; 4 நாட்களுக்கு சூறாவளி காற்று வீசும்

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு: கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 19ம் தேதி(நாளை) வட உள்தமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20, 21ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு(இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.  இன்றும், நாளையும் லட்சதீவு, கர்நாடகா, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்….

The post வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 16 மாவட்டங்களில் கனமழை; 4 நாட்களுக்கு சூறாவளி காற்று வீசும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Zone Meteorological Research Centre ,Sendamarai Kannan ,Kerala ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்