×

டபுள் டக்கரில் தீரஜ் ஜோடியானார் ஸ்ம்ருதி

 

சென்னை: சூர்யா, ஏர் ஃபிளிக் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில், தீரஜின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டபுள் டக்கர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை, வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். ஃபேண்டஸி அம்சங்களுடன் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக, இப்படத்தை அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கியுள்ளார். சூர்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.நடிகர் தீரஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில், இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் அவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளது. இது பார்வையாளர்களுக்கு மிகப்புதுமையான சினிமா அனுபவமாக இருக்கும் என்கிறார் இயக்குனர். ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாக நடிக்கும் படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். வித்யாசாகர், ‘டபுள் டக்கர்’ படத்திற்கு இசையமைக்கிறார். கௌதம் ஒளிப்பதிவு செய்கிறார், வெற்றி எடிட்டிங் பணியை கவனிக்கிறார், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை இந்த கோடையில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

The post டபுள் டக்கரில் தீரஜ் ஜோடியானார் ஸ்ம்ருதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dheeraj ,Smruti ,Chennai ,Suriya ,Air Flick Productions ,Meera Mahadi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...