×

7 வருடங்களுக்கு பிறகு தமிழில் ஹீரோயினாக நடிக்கும் பூமிகா

 

சென்னை: 7 வருட இடைவெளிக்கு பிறகு பூமிகா ஹீரோயினாக நடிக்கும் படம் ‘ஸ்கூல்’. இதில் அவர் பள்ளி மாணவிகளுக்கு உளவியல் பயிற்சி அளிக்கும் ஆசிரியையாக நடிக்கிறார். இந்த படத்தை குவாண்டம் பிலிம் பேக்கடரி சார்பில் ஆர்.கே.வித்யாதரன் மற்றும் கே.மஞ்சு இணைந்து தயாரிக்கிறார்கள். யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், பக்ஸ், சாம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.கே.வித்யாதரன் இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறும்போது, ‘இது ஒரு மேல்நிலை பள்ளியில் நடக்கும் கதை. ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ, மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி பேசும் படம். மாணவ, மாணவிகளை உளவியல் ரீதியாக மேம்படுத்தும் ஆசிரியராக பூமிகா நடித்துள்ளார். என்றார்.

The post 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் ஹீரோயினாக நடிக்கும் பூமிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bhumika ,Chennai ,RKVidyadaran ,K.Manju ,Quantum Films ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...