×

இயக்குனர் செல்லாவுடன் மீண்டும் இணையும் விஷ்ணு விஷால்

சென்னை: கடந்த ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும் புது படம் உருவாக உள்ளது. இதை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11வது தயாரிப்பாக உருவாகிறது. கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணுவிஷாலுடன் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். காமெடி கதை கொண்டு குடும்ப சித்திரமாக இது உருவாகியிருந்தது. ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘கட்டா குஸ்தி’, ‘எப்ஐஆர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. இப்போது மீண்டும் ஒரு காமெடி பின்னணியில் உருவாகும் பேமிலி ஆடியன்சுக்கான படமாக இப்படம் தயாராகிறது. செல்லா அய்யாவு எழுதி, இயக்குகிறார். ‘இந்த புதிய திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள், தற்போது துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். ஹீரோயின் தேர்வும் நடக்கிறது’ என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

The post இயக்குனர் செல்லாவுடன் மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vishnu Vishal ,Cella ,CHENNAI ,Cella Ayyavu ,Vishnu Vishal Studios ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மாண்புமிகு 29 பைசா மோடியை செல்லா...