×

புனே பட விழாவில் காதல் என்பது பொதுவுடைமை

 

சென்னை: இந்த ஆண்டுக்கான 22வது புனே உலக திரைப்பட விழாவில் ‘காதல் என்பது பொதுவுடைமை’ என்ற படம் திரையிடப்பட்டது. ஏற்கனவே இப்படம் இந்தியன் பனோரமாவின் கோவா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. நவீன காதல் கதை கொண்ட இதை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். ஏற்கனவே இவர் ‘லென்ஸ்’, ‘மஸ்கிடோபிலாசபி’, ‘தலைக்கூத்தல்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தில் லிஜோமோல், ரோகிணி, வினீத் ராதாகிருஷ்ணன், கலேஷ் ராம் ஆனந்த், அனுஷா, தீபா நடித்துள்ளனர். மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘காதல் தி கோர்’ என்ற படத்தை இயக்கிய ஜியோ பேபி வழங்க, மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் புரொடக்‌ஷன், சிம்மட்ரி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளன. சரவணன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

The post புனே பட விழாவில் காதல் என்பது பொதுவுடைமை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Pune Film Festival ,CHENNAI ,22nd Pune World Film Festival ,Indian Panorama ,Goa International Film Festival ,Jayaprakash ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...