×

சமூக விரோதி படத்துக்கு மறுதணிக்கை

சென்னை: சீயோனா பிலிம் பேக்டரி சார்பில் சீயோன் ராஜா தயாரித்து எழுதி இயக்கியுள்ள படம், ‘சமூக விரோதி’. பிரஜின், கே.ராஜன், கஞ்சா கருப்பு, வனிதா விஜயகுமார், நாஞ்சில் சம்பத் நடித்துள்ளனர். பி.எஸ்.ஜிஜூ மோன் ஒளிப்பதிவு செய்ய, மலாக்கி இசை அமைத்துள்ளார். இப்படக்குழு சார்பில், திரைப்பட தணிக்கைக் குழுவினர் படம் பார்ப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்து முடித்த தணிக்கைக் குழு அதிகாரிகள், இப்படத்துக்கு என்ன சான்றிதழ் கொடுப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் இருந்ததாக திரை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், தயாரிப்பு நிறுவனம் சார்பில் மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சமூக விரோதி படத்துக்கு மறுதணிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Seon Raja ,Seona Film Factory ,Prajin ,K. Rajan ,Kanja Karupu ,Vanitha Vijayakumar ,Nanjil Sampath ,PS Jiju Mon ,Malachi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...