×

பார்த்திபன் இயக்கத்தில் குழந்தைகளுக்கான படம் டீன்ஸ்

சென்னை: உலகில் முதல்முறையாக தியேட்டர்களில் தணிக்கை சான்றிதழுடன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட படம், ‘டீன்ஸ்’. முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மைய மாக கொண்ட சாகச திரில்லர் படமான இதை பார்த்திபன் எழுதி இயக்கி இருக்கிறார். பயாஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி நி வாசன், ரஞ்சித் தண்டபாணி இணைந்து தயாரித்து உள்ளனர். கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்பொறுப்பை ஏற்றுள்ளார்.

காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து பார்த்திபன் கூறுகையில், ‘எனது புதிய படத்தின் முதல் பார்வை, முதல்முறையாக சென்சார் சான்றிதழுடன் வெளியாகியுள்ளது. இமான், காவ்மிக் ஆரி ஆகியோருடனான எனது முதல் சிறந்த படைப்பாக இப்படம் அமையும். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக என்னை ரசித்து வரும் அனைவருக்கும் நன்றி’ என்றார். பார்த்திபனின் முந்தைய படமான ‘இரவின் நிழல்’, தேசிய விருது உள்பட பல சர்வதேச விருதுகள் பெற்று சாதனை படைத்திருந்தது.

The post பார்த்திபன் இயக்கத்தில் குழந்தைகளுக்கான படம் டீன்ஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Parthiban ,CHENNAI ,Bioscope Dreams ,Akira Productions ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்