×

வடக்குப்பட்டி ராமசாமியில் அரசியல் இல்லை: இயக்குனர் விளக்கம்

சென்னை: சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் அரசியல் எதுவும் இல்லை என பட இயக்குனர் கார்த்திக் யோகி தெரிவித்துள்ளார். இந்த படத்துக்காக கிராமம் செட் போடப்பட்டுள்ளது. படத்தை இயக்கியுள்ள கார்த்திக் யோகி, ஏற்கனவே சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா படத்தை இயக்கியவர். ‘வடக்குப்பட்டி ராமசாமி’யில் மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பீபிள் பிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளார்.

கார்த்திக் யோகி கூறும்போது, ‘மக்களின் பக்தி பயத்தை ஹீரோ பயன்படுத்துவதாக படத்தில் காட்சி வருகிறது. அதனால் படத்தில் மக்கள் மனது புண்படும்படி ஒரு காட்சியும் இல்லை. ஆனால், ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. படம் பார்க்கும்போது அது மக்களுக்கு புரியும். அரசியல் பார்வை மட்டும் இருக்காது. முழுக்க முழுக்க பொழுதுப்போக்கிற்காக எடுக்கப்பட்ட படம். பிப்ரவரி 2ம் தேதி ரிலீசாகிறது’ என்றார்.

The post வடக்குப்பட்டி ராமசாமியில் அரசியல் இல்லை: இயக்குனர் விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Karthik Yogi ,Santhanam ,Dikilona.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...