×

பிப்ரவரி 2ல் ரிலீசாகிறது ஹாரர் கதை எக்ஸிட்

சென்னை: ‘பசங்க’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஸ்ரீராம் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘எக்ஸிட்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஷாஹீன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தில் ஸ்ரீராம், விஷாக் நாயர், ஷாஹீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரியாஸ் நிஜாமுதீன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தனுஷ் ஹரிக்குமார் மற்றும் விமல் ஜித் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஹாரர் மற்றும் சர்வைவல் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் படத்தை ப்ளூம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வேணுகோபாலகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். தமிழ் மற்றும் மலையாள மொழியில் உருவாகி இருக்கும் படம் பிப்ரவரி 2ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதை தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. பசங்க படத்தில் சிறுவனாக நடித்திருந்த ஸ்ரீராம், நவரசா வெப்சீரிஸிலும் நடித்தார். இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

The post பிப்ரவரி 2ல் ரிலீசாகிறது ஹாரர் கதை எக்ஸிட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Sriram ,Shaheen ,Vishak Nair ,Riaz Nizamuddin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குற்றப்பிரிவு வழக்கு...