×

நார்வே திரைப்பட விழாவுக்கு தமிழ் படங்கள் தேர்வு

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து தமிழர் விருதுகளை வழங்கி வருகிறது நார்வே தமிழ்த் திரைப்பட விழா. பதினான்கு வருடங்களாக நடந்து வருகிறது. தற்போது 15வது நார்வே திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு 2023ல் வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு விருது வழங்க இருக்கிறார்கள். இதுகுறித்து நார்வே தமிழ் திரைப்பட விழா இயக்குனர் வசீகரன் சிவலிங்கம் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு முதல் கலைச்சிகரம் விருதினை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் விருது என்ற பெயரில் வழங்க இருக்கின்றோம்.

கடந்த ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து, நடுவர்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 20 திரைப்படங்கள், தமிழர் விருதுகளை பெறும் தமிழ்நாட்டு கலைஞர்களின் விவரங்களை அறிவிக்க உள்ளோம். தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள் விவரம்: விடுதலை பாகம் 1 – வெற்றிமாறன். அயோத்தி – ஆர்.மந்திர மூர்த்தி. போர் தொழில்- விக்னேஷ் ராஜா. மாமன்னன் – மாரி செல்வராஜ், குட் நைட் – விநாயக் சந்திரசேகரன். டாடா – கணேஷ் கே.பாபு. தண்டட்டி – ராம் செங்கையா. யாத்திசை – தரணி ராஜேந்திரன். பொன்னியின் செல்வன் 2 – மணிரத்னம். அநீதி – வசந்த பாலன். சித்தா – அருண் குமார். இறுகப்பற்று- யுவராஜ் தயாளன் உள்பட 20 படங்கள்.

The post நார்வே திரைப்பட விழாவுக்கு தமிழ் படங்கள் தேர்வு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Norway Film Festival ,Chennai ,Norwegian Tamil Film Festival ,Tamil Awards ,15th Norwegian Film Festival ,Tamil ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...