×

டி.வி நடிகருடன் சுவாசிகா காதல் திருமணம்

கொச்சி: மலையாள நடிகை சுவாசிகா விஜய் (33), தமிழில் வெளியான ‘வைகை’, ‘கோரிப்பாளையம்’, ‘மைதானம்’, ‘கண்டதும் காணாததும்’, ‘பண்டுவம்’, ‘சாட்டை’, ‘அப்புச்சி கிராமம்’, ‘சோக்காலி’, ‘பிரபா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் நடித்துள்ள அவர், ஏராளமான டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் ஹரீஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘லப்பர் பந்து’ என்ற படத்தில் நடித்து வரும் சுவாசிகா விஜய், தன்னுடன் இணைந்து மலையாள டி.வி தொடரில் நடித்த மாடலும், நடிகருமான பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்தார். இதையறிந்த இரு வீட்டு பெற்றோரும் அவர்கள் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இதையடுத்து சுவாசிகா விஜய், பிரேம் ஜேக்கப் காதல் திருமணம் வரும் 26ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. 27ம் தேதி கொச்சியில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

The post டி.வி நடிகருடன் சுவாசிகா காதல் திருமணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : D. Swasika ,KOCHI ,SWASHIKA VIJAY ,T. V ,D. V ,V ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...