- புத்த பூர்ணிமா கோலாகலா
- வேலுடை
- தரித்து
- பாங்காக்
- புத்த பூர்ணிமா
- தாய்லாந்து
- வியட்நாம்
- சீனா
- ஜப்பான்
- வேலுடை தரித்து விகாரை!
பாங்காக்: உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்லாந்து, வியட்நாம், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பெளத்த விகாரங்கள் ஒளி வெள்ளத்தில் மிதந்தன. புத்தரின் பிறப்பு, ஞயாணோதயம், புத்தரின் இறப்பு ஆகிய மூன்றுமே மே மாதம் பவுர்ணமி நாளில் புத்த பூர்ணிமாவாக பெளத்தர்களால் கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே உள்ள தாமக்யா விகாரை விளக்கு ஒளியில் ஜொலித்தது. 2.10 லட்சம் எல்இடி விளக்குகள் ஒருங்கிணைந்து புத்தர் மற்றும் அவரது போதனைகளை விவரிக்கும் காட்சிகளை வெளிச்சம்போட்டு காட்டின. தாமக்யா விகாரில் நடந்த வழிபாட்டை இணையம் மூலம் வீடியோவாக உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பெளத்தர்கள் பார்வையிட்டனர். வெள்ளுடை தரித்த ஏராளமான பெளத்தர்கள் விகாரையில் விளக்கேற்றி வழிபட்டனர். இதே போல பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்களால் அசாதாரண சூழல் நிலவும் இலங்கையிலும் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் களைகட்டின. இதற்காக ஊரடங்கு நிலை முற்றிலுமாக விலக்கப்பட்டது. கொழும்பு நகர வீதிகள் விளக்கு ஒளியில் ஜொலித்தன. அதிபர் அலுவலகம் எதிரே புத்த பூர்ணிமாவை குறிக்கும் சில வண்ண கொடிகள் பறந்தாலும் கூட கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் மட்டுமே போராட்டம் ஓயும் என்று அவர்கள் பிடிவாதமாக ஒரே குரலில் முழங்குகின்றனர். …
The post உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம் : வெள்ளுடை தரித்து விகாரையில் தீபம் ஏற்றி பெளத்தர்கள் வழிபாடு!! appeared first on Dinakaran.