×

5 பாலஸ்தீனிய பத்திரிக்கையாளர்கள் பலி

டெய்ர் அல் பாலாஹ்,: காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனிய பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல் அவ்டா மருத்துவமனைக்கு வெளியே கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் தொலைக்காட்சியில் பணியுரியும் 5 பத்திரிக்கையாளர்கள் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

The post 5 பாலஸ்தீனிய பத்திரிக்கையாளர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : al ,-Balah ,Gaza ,Health Ministry ,Israel ,Al-Awda Hospital ,Nusra ,
× RELATED காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 20 பேர் பலி