×

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனாவுடன் நடிக்கும் ராஷ்மிகா

ஐதராபாத்: #DNS என்ற தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தின் மூலம் தனுஷ், நாகார்ஜூனா, இயக்குனர் சேகர் கம்முலா இணைகின்றனர். சோனாலி நரங் வழங்க, ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ், அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழா பூஜை ஐதராபாத்தில் நடந்தது. #DNS என்பது தனுஷ், நாகார்ஜூனா, சேகர் கம்முலா ஆகிய பெயர்களை ஆங்கிலத்தில் எழுதினால் வரும் முதல் எழுத்து ஆகும். திரைப்படப் பூஜையில் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் கலந்துகொண்டனர். இப்படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, யானிக் பென் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

The post சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனாவுடன் நடிக்கும் ராஷ்மிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shekhar Kammula ,Rashmika ,Dhanush ,Nagarjuna ,Hyderabad ,Srivenkateswara Cinemas ,Amigos Creations ,Sonali Narang ,Pooja Hyderabad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த...