×

விக்ரமின் ‘தங்கலான்’ ஏப்ரலில் ரிலீசாகிறது

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், ‘பூ’ பார்வதி, பசுபதி நடித்துள்ள படம், ‘தங்கலான்’. மிகப் பிரமாண்டமான முறையில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா, நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படம், கோலார் தங்கச்சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவித்த கஷ்டங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பீரியட் பிலிமான இது, வரும் 26ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையாத நிலையில், வரும் ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தேதி பிறகு அறிவிக்கப்படுகிறது.

The post விக்ரமின் ‘தங்கலான்’ ஏப்ரலில் ரிலீசாகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,B.Ranjith ,Vikram ,Malavika Mohanan ,Boo' Parvathy ,Pasupathi ,GV ,Prakash Kumar ,KE Gnanavelraja ,Studio Green, Neelam Productions ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்