×

கிருஷ்ணகிரியில் கனமழையால் தேக்கம் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி-நகராட்சி தலைவர் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியினை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி நகரில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து ஓடியது. குறிப்பாக ஜக்கப்பன் நகர், நெசவுகார தெரு, பாரதியார் நகர், பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரானது வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி தவைவர் பரிதாநவாப், மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்ததே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது என்பதை அறிந்தார். இதையடுத்து துப்புரவு ஊழியர்களை கொண்டு மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டது. இப்பணியினை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். அப்போது, நகராட்சி பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், சந்திரகுமார், உதயகுமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் வேலுமணி, தங்கலட்சுமி, பிர்தோஸ்கான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் லியாகத் மற்றும் கனல் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்….

The post கிருஷ்ணகிரியில் கனமழையால் தேக்கம் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி-நகராட்சி தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnakiri ,Dinakaran ,
× RELATED காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு