×

பெயர் மாற்றத்துடன் போஸ்டர் வெளியீடு: பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப்

ஐதராபாத்: மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா படத்துக்கு ‘தி ராஜா சாப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி.விஸ்வபிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் பிரபாஸை வேறொரு தளத்தில் வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைக்கிறார். ‘மகதீரா’, ‘பாகுபலி’ போன்ற படங்களில் பணியாற்றிய கமல் கண்ணன் தலைமையிலான குழு விஎப்எக்ஸ் பணிகளை மேற்கொள்கிறது. இதில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருக்கின்றனர். ஏற்கனவே நிதி அகர்வால் நடித்து வரும் நிலையில், இன்னொரு ஹீரோயினைப் பற்றி விரைவில் அறிவிக்கப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரில், பிரபாஸ் பெயரில் ஆங்கிலத்தில் கூடுதலாக ‘S’ சேர்க்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக ஆங்கிலத்தில் ‘PRABHAS’ என்று இடம்பெறும் அவரது பெயரில் கூடுதலாக ‘எஸ்’ சேர்க்கப்பட்டு, ‘PRABHASS’ என்று இடம்பெற்றுள்ளது. நியூமராலஜிப்படி பிரபாஸ் தனது பெயரை மாற்றிக் கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தவிர, நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.

The post பெயர் மாற்றத்துடன் போஸ்டர் வெளியீடு: பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hyderabad ,India ,Maruti ,TG Vishwaprasad ,Vivek Guchibotla ,People Media Factory ,Prabhas ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...