×

இசை அமைப்பாளரான சவுண்ட் இன்ஜினீயர்

சென்னை: இசை அமைப்பாளர், பாடகர், இயக்குனர், நடிகர் என்று பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதியிடம் சவுண்ட் இன்ஜினீயராகப் பணிபுரிந்து, ஒரு படத்துக்கு எப்படி இசை அமைக்க வேண்டும் என்ற நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டவர், இசை அமைப்பாளர் கவுசிக் கிரிஷ். பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணால கண்ணால’ என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக மாறிய அவர், தொடர்ந்து நிறைய பாடல்களைப் பாடியிருந்தார்.

அவற்றில் பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளது. பிறகு அருள்நிதி நடித்த ‘டி பிளாக்’ என்ற படத்துக்கு பின்னணி இசை அமைத்த கவுசிக் கிரிஷ், யூடியூப் குழுவினர் நடித்து வெளியான ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளரானார். தற்போது ஒரு பேண்டஸி படத்துக்கு அவர் இசை அமைத்து வருகிறார்.

 

The post இசை அமைப்பாளரான சவுண்ட் இன்ஜினீயர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Kavusik Krish ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஏ.எல். விஜய் இயக்கத்தில் மாதவன்