×

சின்னமனூர் சந்தையில் முருங்கைக்காய் விலை இருமடங்காக உயர்வு

சின்னமனூர் : சின்னமனூர் சுற்றியுள்ள காமாட்சிபுரம், துரைச்சாமிபுரம், அழகாபுரி அண்ணாநகர், வருசநாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் முருங்கைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.வருடத்தில் 6 மாதம் வரை சீசன் இருக்கும் முருங்கைக்காய் சீசன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக துவங்கியது. அப்போது ஒரு முருங்கைக்காய் மட்டும் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து 2 வாரங்கள் கழித்து ரூ.10க்கு 4 முருங்கைக்காய்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாங்கி பயன்படுத்தினர். மேலும் சின்னமனூரிலிருந்து சுற்றியுள்ள ஊர்கள் மற்றும் கேரளா போன்ற பகுதிகளுக்கு முருங்கைக்காயை வியாபாரிகள் வாங்கி சென்றனர்.இந்நிலையில் தற்போது முருங்கைக்காய் வரத்து குறைவால் மீண்டும் விலை அதிகரித்துள்ளது. நேற்று சின்னமனூர் சந்தையில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.20க்கு விற்ற நிலையில் அப்படியே இரு மடங்காக விலை ரூ.40 ஆக உயர்ந்து விற்பனையானது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்….

The post சின்னமனூர் சந்தையில் முருங்கைக்காய் விலை இருமடங்காக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Kamatshipuram ,Duraichamipuram ,Alagapuri Annanagar ,Varusanadu ,
× RELATED சின்னமனூர் பகுதிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு