×

கங்குவா படப்பிடிப்பை முடித்தார் சூர்யா

சென்னை: சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 10 மொழிகளுக்கு மேலாக 3டி முறையில் சரித்திரப் படமாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து தாய்லாந்தில் நடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் எக்ஸ் தளத்தில் சூர்யா கூறுகையில், ‘கங்குவா படத்தின் என்னுடைய கடைசி ஷாட் முடிந்துவிட்டது. மொத்த படப்பிடிப்பு தளமும் பாசிட்டிவிட்டியால் நிரம்பியுள்ளது. இப்படம் பெரியது மற்றும் ஸ்பெஷலானது. நீங்கள் அதை திரையில் பார்ப்பதை காண ஆர்வமாக இருக்கிறேன். இயக்குநர் சிவாவிற்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

The post கங்குவா படப்பிடிப்பை முடித்தார் சூர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Suriya ,Siruthai Siva ,Bollywood ,Disha Patani ,Yogi Babu ,Kingsley ,Kowai Sarala ,Anandraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: வாலிபர் சிறையில் அடைப்பு