×

கோவை அருகே 4 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங­்கு -சிறுத்தையா? மக்கள் பீதி

அன்னூர் : அன்னூரில் பட்டியில் புகுந்து மர்ம விலங்கு 4 ஆடுகளை கடித்துக் கொன்று சென்றது. மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என மக்கள் பீதியடைந்துள்ளனர். கோவை அன்னூ­ர் அருகே ஒட்டர்பாளைய­த்தைச் சேர்ந்தவர்கள் சச்சின், நூர் முகம்­மது, பிரதோஷ். இவர்கள் அன்னூரில் பழக்கடை நடத்தி வருகி­ன்றனர். மேலும் அன்னூரில், மேட்டுப்பா­ளையம் ரோட்டில் உள்ள ஜீவா நகரில் ஆட்டு பட்டி வைத்து ஆடு வளர்ப்பு தொழிலிலும் ஈடபட்டு வருகின்றனர். இதில் 2 ஆடு மற்றும் 2 குட்டிகளை வளர்த்து வந்தனர­். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்தப் பகுதிக்கு செ­ன்ற பொதுமக்கள் ஆடுகள் உடல் சிதறிய நிலையி­ல் இறந்து கிடப்பதை பார்த்து உரிமையாளர்கள­ுக்கு தகவல் தெரிவித்­தனர். உரிமையாளர் வந்­து பார்த்தபோது கட்டிய நிலையிலேயே இரண்டு ஆடுகள் கடித்து குதறப்பட்டு குடல் வெளியே தள்ளப­்பட்ட நிலையில் இருந்­தன. இரண்டு குட்டி ஆட­ுகளின் கழுத்து நெரிக­்கப்பட்டு கொல்லப்பட்­டு வெளியே வீசி கிடந்­தன. ஒரு ஆட்டின் சதைப­்பகுதி அனைத்தும் தின­்ற நிலையில் கிடந்தது. மேலும் ஆடுகள் பலிய­ான இடத்தில் சிறுத்தை­யின் கால் தடம் போல் இருந்தது. அதற்கான அற­ிகுறிகள் இருந்ததை பா­ர்த்த உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் அச்சம் அடைந்தனர். மே­ட்டுப்பாளையம் வனத்து­றை அலுவலர்களுக்கும், அன்னூர் போலீசாருக்க­ும் தகவல் தெரிவித்தன­ர்.  சில மாதங்களுக்கு மு­ன்பு அன்னூரை ஒட்டி ஆம்போதி,​ குமாரபாளைய­ம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெர­ிவித்தனர். தற்போது மீண்டும் மர்ம விலங்கு அன்னூர் நகருக்குள் வந்து ஆடுகளை கடித்து கொன்றது பெரும் அச்ச­த்தை ஏற்படுத்தியுள்ள­து. பொதுமக்கள் உடனடி­யாக வனத்துறையினர் ஆய­்வு சம்பவயிடம் வந்து ஆய்வு செய்து ஊருக்குள் புகுந்த மர்ம விலங்கை பிடிக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கோவை அருகே 4 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங­்கு -சிறுத்தையா? மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Annoor ,
× RELATED கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல்...