×

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா

சென்னை: சமீபகாலமாக வில்லனாகவே நடித்து வரும் எஸ்.ஜே. சூர்யா தற்போது மீண்டும் ஹீரோவாக நடிக்க தயாராகி வருகின்றார். இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடிக்க இருக்கிறார். சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன். அதையடுத்து கார்த்தி, ராஷ்மிகா நடிப்பில் ‘சுல்தான்’ படத்தை இயக்கினார். இப்படம் மூலம்தான் ராஷ்மிகா தமிழில் அறிமுகம் ஆனார். தற்போது தனது புதிய படத்தை காமெடி ஜானரில் உருவாக்க ஸ்கிரிப்ட் பணிகளில் பாக்யராஜ் கண்ணன் ஈடுபட்டுள்ளார். இதில் நடிக்கும் ஹீரோயினுக்கான தேர்வும் நடந்து வருகிறது. விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

The post பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : SJ Surya ,Bhagyaraj Kannan ,Chennai ,SJ ,Suriya ,S.J. Suriya ,Sivakarthikeyan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...