×

அமெரிக்க தொழிலதிபருடன் திருமணமா? அஞ்சலி பதில்

சென்னை: அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை ராம் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. இதற்கிடையில் அஞ்சலி, அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியுள்ளது. இது குறித்து அஞ்சலி கூறியது: சினிமாவில் எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப் பற்றி யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள். முதலில், நடிகர் ஜெய்யை காதலித்ததாகச் செய்தி வந்தது. இப்போது தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக பரப்புகிறார்கள். நடிகை என்றால் என்னவேண்டுமென்றாலும் சொல்லலாமா? நான் இன்னும் சிங்கிள்தான். யாரையும் காதலிக்கவும் இல்லை. திருமணமும் செய்யவில்லை. அவ்வப்போது என்னைப் பற்றி வரும் வதந்தியால் எனது குடும்பத்தார் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் புரளி கிளப்புகிறவர்களுக்கு இதில் அக்கறை கிடையாது. இவ்வாறு அஞ்சலி கூறினார்.

The post அமெரிக்க தொழிலதிபருடன் திருமணமா? அஞ்சலி பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anjali ,CHENNAI ,Ram ,America ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் காவலர் குண்டு பாய்ந்து பலி