×

செல்வராகவன் இயக்கத்தில் ஜெயராம்

சென்னை: இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் எழுதி இயக்கும் புதிய படத்தில் ஜெயராம், அனஸ்வரா ராஜன் நடிக்கின்றனர். இத்தகவலை ஜெயராம் தெரிவித்தார். ஜெயராம் நடிப்பில் வரும் 11ம் தேதி ரிலீசாகும் மலையாளப் படம், ‘ஆபிரஹாம் ஒஸ்லர்’. இதன் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ெஜயராம், செல்வராகவன் இயக்கத்தில் தானும், மலையாள நடிகை அனஸ்வரா ராஜனும் நடிப்பதாக சொன்னார். ‘ஆபிரஹாம் ஒஸ்லர்’ படத்தில் இணைந்து நடித்துள்ள ஜெயராம், அனஸ்வரா ராஜன் இருவரும் செல்வராகவன் இயக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைகின்றனர்.

The post செல்வராகவன் இயக்கத்தில் ஜெயராம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jayaram ,Selvaraghavan ,Chennai ,Anaswara Rajan ,Jejayaram ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வைகோ மீதான வழக்கு 4 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு