×

பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பள்ளி மாணவி: டிரைவர், கண்டக்டர் கைது

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே பஸ்சை நிறுத்தாமல் சென்றதால், ஓடும் பஸ்சில் இருந்து குதித்தபோது கீழே விழுந்த பள்ளி மாணவி காயமடைந்தார். இது தொடர்பாக டிரைவர், கண்டக்டரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்கிரமராஜா. இவரது மகள் இனியா (15). திம்மநாய்கன்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். பஸ் டிரைவர், அரசு பள்ளி முன்பு பஸ்சை நிறுத்தாமல் சென்றுகொண்டிருந்தார்.  இதுகுறித்து மாணவி கேட்டபோது பஸ்சை நிறுத்த நேரமில்லை. வேண்டுமென்றால் ஓடும் பஸ்சில் இருந்து இறங்குமாறு கண்டக்டர் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவி ஓடும் பஸ்சிலிருந்து கீழே குதித்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் மாணவி உயிர் தப்பினார். மங்களபுரம் போலீசார் பஸ் டிரைவரான ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (22), கண்டக்டர் மணி(25) ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர். …

The post பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பள்ளி மாணவி: டிரைவர், கண்டக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : NAMAGIPATT ,Namagripet ,Dinakaran ,
× RELATED பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும்...