×

பிப்ரவரி 22ம் தேதி ரகுல் பிரீத் சிங் திருமணம்

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் ரகுல் பிரீத் சிங். தமிழில் ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் இவர் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது இவர் நடிப்பில் தமிழில் ‘அயலான்’ படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகின்றார்.
தற்போது 33 வயதாகும் ரகுல் பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வருகிறார். ஜாக்கிக்கு 39 வயதாகிறது. கடந்த 2021ம் ஆண்டில் தாங்கள் காதலிப்பதை இந்த ஜோடி உறுதிப்படுத்திய நிலையில், தொடர்ந்து பல நாடுகளுக்கு இவர்கள் ஒன்றாக சென்று சுற்றி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாக்கி பக்னானி தமிழில் திரிஷாவின் ‘மோகினி’ படத்தில் நடித்துள்ளார்.

The post பிப்ரவரி 22ம் தேதி ரகுல் பிரீத் சிங் திருமணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rahul Preet Singh ,Chennai ,Rakul Preet Singh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...