×

மீண்டும் இணைந்த வடிவேலு, பஹத் பாசில்

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் வடிவேலு, பஹத் பாசில் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். இது அவர் தயாரிக்கும் 98வது படமாகும். கடந்த 2009ல் தமிழில் வெளியான ‘ஆறுமனமே’, 2014ல் திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘வில்லாலி வீரன்’ ஆகிய படங்களை இயக்கிய சுதீஷ் சங்கர், ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதர விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகிறது.

The post மீண்டும் இணைந்த வடிவேலு, பஹத் பாசில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Udayaniti Stalin ,Keerthi Suresh ,Vadivelu ,Bahad ,Super Good Films ,R. B. Chowdhury ,Vadiveli ,Bahat Basil ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நிதி பகிர்வில் தமிழ்நாட்டை...